2 years ago (2016-12-02 16:01:32)

உங்கள் உருவ அமைப்பும் ஜோதிடமும் வாங்க பார்கலாம்!

0 0
61

சாதாரணமாக உடலாதிபதி என்பவர் சந்திரன்தான். அவர்தான் தோற்றங்களுக்குரிய கிரகம்.  உதாரணத்திற்கு சுக்கிரன் நன்றாக இருக்கிறாரென்றால், ஒருவிதமான காந்தமான கண்கள், கணிவான கண்கள். அவர்கள் சும்மா போய்க் கொண்டிருந்தால் கூட, என்ன சார்? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பேச வைக்கக் கூடியவர்கள்.

அந்த மாதிரியான கண்களெல்லாம் சுக்கிரன் நன்றாக இருந்தாரென்றால் அந்த ஒளி அவர்களிடம் இருக்கும். அவர்களெல்லாம் பெரிதாக ஒன்றும் நம்மிடம் பேச வேண்டும் என்று அவசியமே இல்லை. சும்மா அப்படி பார்த்து கண் சிமிட்டினாலே போதும் நாம் விழுந்து விடுவோம். அந்த மாதிரி இருப்பார்கள்.

சந்திரனும் அதேபோல வலுவாக இருக்க வேண்டும். சந்திரன்தான் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முகம், அந்த முகத்திற்கு தகுந்த மாதிரி மூக்கு, கண், காது எல்லாம் செதுக்கி வைத்திருக்கிறது என்று சொல்வார்களே, அதெல்லாம் சந்திரன்தான்.

லக்னாதிபதி, உதாரணத்திற்கு மேஷ இலக்னம் என்றால் அதிகமான உயரமாக இருக்க மாட்டார்கள். சராசரி உயரம், பருத்த தேகம் அல்ல. ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள்.

இதுபோல அங்க இலட்சணங்கள் ஒவ்வொரு நட்சத்திர ராசிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் அதுபோலத்தான் இருப்பார்கள். ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரம், அதற்கும் மேலாக இருப்பார்கள்.

மிதுனம், கன்னி இதெல்லாம் புதன் ராசி. இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும். குறிப்பாக கன்னி ராசிக்காரர்களுக்கு மிளகாய் மூக்கு இருப்பதையெல்லாம் பார்க்கிறோம்.

இதற்கடுத்து துலாம், சிம்மம், மகரம் ராசிக்கார்களைப் பார்த்தீர்களென்றால், மூக்கு நீளமாக இருக்கும். விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு எலும்புகள் வெளியே தெரியா வண்ணம் தகைமூடி சற்று உருண்டை உடலமைப்பு கொண்டிருப்பார்கள்.

நடுத்தர உயரமும், அகன்ற நெற்றியும், அமைதியான உருவ அமைப்புடன் தோன்றினாலும், தேளின் விஷயத்தை போன்று தன்னுடைய பேச்சால் மற்றவர் மனதை புண்படுத்தி விடுவார்கள். மாநிறமும் மேல் புருவங்கள் சற்று உயர்ந்தும் காணப்படும்.

நடை , உடை பாவனைகளில் ஒரு கம்பீரமான தோற்றம் இருக்கும். கும்ப ராசிக்காரர்கள் நீண்ட ஆயுளை பெற்றவர்கள். உருவ அமைப்பில் புருவங்கள் அழகாகவும், உதடுகள் மூடியும், மூக்கு  அகன்றும் காணப்படும்.

கழுத்து சிறுத்தும், பற்கள் உறுதியற்றும் இருக்கும். விரல்கள் கூர்மையாகவும், கைகளுக்கேற்றவாறு அமைந்திருக்கும்.

இவர்கள் உடுக்கும் உடை, உண்ணும் உணவு எல்லாமே மற்றவர்களுக்கு வினோதமானதாக இருக்கும் என்றாலும் ஆத்ம பலமும் மனோதிடமும் கொண்டிருப்பார்கள்.

தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு மூக்கு ஒரு மாதிரி மடிந்து, அதாவது ஊர் பக்கத்திலெல்லாம் பெருமாள் மூக்கு என்று சொல்வார்கள் அந்த மாதிரி இருக்கும்.

மூக்கு பற்றி ஏன் அதிகமாகச் சொல்கிறேன் என்றால், நாசிதான் சாமுத்திரிகா இலட்சணத்தில் பிரதானம். நாசி, கண்கள், நெற்றி அமைப்பு.

நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்து சில விஷயங்களைச் சொல்லலாம்.

ஏனென்றால் சனி இலக்னத்தையோ, ராசியையோ பார்க்கிறதென்றால் கோடுகள் நெற்றியில் வர ஆரம்பித்து விடும்.

அடுத்து புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய விரல்கள் நீளமான விரல்கள் இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே சொல்லிவிடலாம், புதன் உச்சமாக இருக்கிறார் அவர் ஜாதகத்தில் என்று.

இதுபோன்று கிரகங்கள் பல விஷயங்களில் அங்க அவயவங்களை ஆட்சி செய்கிறது. மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள https://goo.gl/XQWzIW

Sign up or Sign in for free.
And start a new thread.
No Threads
More notes by gurusukran