காலசர்ப்ப தோஷ பரிகாரம் | குருசுக்ரன்.காம்

0 0 78 reads

சாய கிரகங்களான ராகுகேது ஒருவரது சுய ஜாதகத்தில் பாதிக்கப்படுவது, சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறு வயது முதல், வாழ்வின் இறுதிவரையிலான காலகட்டம் வரை அதிக அளவில் இன்னல்களை தரும் அமைப்பாகும், குறிப்பாக ஒரு ஜாதகரின் வாழ்க்கையில் யோகப்பலன்களையும், அவயோகபலன்களையும் நடைமுறைக்கு கொண்டுவரும் அன்பர்களின் சந்திப்பை நிகழ்த்துவது சாய கிரகங்களான ராகுகேது என்றால் அது மிகையில், சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமையுடன் இருப்பின் அவருடன்  சேர்க்கை பெரும் நண்பர்கள், கூட்டாளிகள், அறிமுகம் இல்லாத புதிய நபர்கள், வாழ்க்கை துணை, பொதுமக்கள், வேலையாட்கள், வெளியூர் அல்லது வெளிநாடு சார்ந்த அன்பர்கள் அனைவரும் ஜாதகருக்கு சிறப்பான நன்மைகளையும் வாழ்க்கையில் சிறப்பான நல்ல திருப்பத்தையும் வாரி வழங்கும் நபர்களாக திகழ்வார்கள், சுய ஜாதகத்தில் சாய கிரகங்கள் வலிமை அற்று இருப்பின் மேற்கண்ட பலாபலன்களுக்கு நேர் எதிராக அமைந்துவிடும்.

 

ஜாதகர் தமது வாழ்க்கையில் சந்திக்கும் அன்பர்கள் அனைவராலும் இன்னல்களையும் துன்பங்களையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாக்கும், உறவுகளுடனும் சுமூக போக்கை ஜாதகர் கையாள முடியாது, நல்ல நண்பர்கள் ஜாதகருக்கு கிடைப்பது அரிது, ஜாதகருக்கு அறிமுகமாகும் அன்பர்கள் அனைவரின் வழியில் இருந்தும் துன்பங்களையும் இன்னல்களையும் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுவர், இதனால் ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும், குறிப்பாக ராகு கேது வலிமை அற்று குடும்பம் மற்றும் களத்திர ஸ்தானங்களில் இருப்பின் ஜாதகரின் வாழ்க்கையில் இல்லற துணை ஜாதகரை வெகுவான பாதிப்புகளுக்கு ஆளாக்கும் சூழ்நிலையை தரும், குடும்ப ஸ்தானம் சாய கிரங்கங்களால் பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை துணை, ஜாதகருக்கு தனது வாக்கு மற்றும் குடும்ப வாழ்க்கையில் இருந்து இன்னல்களை தரகூடும், வருமானம் வெகுவாக பாதிக்கும், களத்திர ஸ்தானம் சாய கிரங்கங்களால் பாதிக்கப்படும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை துணை ஜாதகருக்கு பொருத்தமற்று அமைவதால், அவர் வழியில் இருந்து ஜாதகர் வெகுவான இன்னல்களை சந்திக்கும் நிலைக்கு ஆளாக்கும், மேலும் களத்திர ஸ்தானம் ஜாதகருடன் சேரும் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளை குறிப்பதால், நல்ல நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அமைவது சிரமம், மேலும் மேற்கண்ட நபர்களால் ஜாதகர் பெரும் இன்னல்களுக்கு ஓர் அளவு என்பதே இருக்காது, ஜாதகரின் முன்னேற்றம் வெகுவாக பாதிக்கப்படும்.

 

இந்த காலசர்ப்ப தோஷம் பற்றி இன்னும் அறிந்து கொள்ளவும், அது நீங்க ஏற்ற பரிகாரங்களை அறிந்து கொள்ளவும் குருசுக்ரன் அணுகவும், https://goo.gl/2hOOqa

No Threads
more feeds from /u/gurusukran