கடன் சுமை தீர என்ன செய்ய வேண்டும் ?

0 0 261 reads

ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகம் கணிக்கும்போது ‘ஜெனனி ஜென்ம, சௌக்யானாம்’ என்ற செய்யுளை எழுதுவார்கள். இதில் ‘பதவி பூர்வ புண்ணியானாம்’ என்ற சொற்றொடர் வரும். அதாவது அவரவர் பிராப்தப்படி எதற்காக இந்த பிறவி எடுத்து இருக்கிறோமோ, அதற்கேற்ப அவரவர் பூர்வபுண்ணியத்தை பொறுத்தே எல்லாம் அமையும் என்பதாகும். ஆகையால்தான் ஜோதிடம் பார்க்கும்போது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை முக்கியமாக பார்ப்பார்கள்.

 

கிரகங்களால் உண்டாகும் கடன் சுமைகள்

 

பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கைகள் காரணமாகவே கடன் சுமை உண்டாகிறது. இரண்டாம் இடம், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பதினொராம் இடம் ஆகியவை பலம் பெற்று இருந்தால் கடன் சுமை வராது. வந்தாலும் பாதிக்காது. ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து, கடன் அடையும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில் நீச்ச கிரகம் இருந்தாலும் 6, 8, 12ம் இட கிரகங்கள் இருந்தாலும் கடன் ஏற்படும். குரு நீச்சம் அடைந்து அல்லது 6, 8, 12 ல் மறைந்தால் பொருளாதாரம் பாதிக்கப்படும். சனி, செவ்வாய் சேர்க்கை அல்லது சனி, கேது சேர்க்கை உள்ள ஜாதகங்கள் கடனால் அவதிப்பட நேரிடும். பெரும்பாலும் சுமுகமாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் திடீர் வீழ்ச்சி, பண நஷ்டம், சொத்து இழப்பு ஏற்படுவதற்கு அந்தந்த கால கட்டங்களில் வரும் தசாபுக்திகளே காரணம்.

 

6, 8, 12ம் இட சம்பந்தப்பட்ட தசாபுத்திகளில் கடன் தொல்லைகள் கூடும். ஆறாம் அதிபதி லக்னாதிபதி, லக்னத்துடன் சம்பந்தப்படும்போது வீண் விரயங்கள், உடல் கோளாறுகள் மற்றும் தவறான அணுகுமுறையாலும் கடன் உண்டாகும். இரண்டாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப செலவு, குடும்ப செலவு, கண் சம்பந்தமான மருத்துவ செலவுகள் ஏற்படும். மூன்றாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சொந்தபந்தம், சகோதரர்களால் வீண் செலவு, கடன் வரும். நான்காம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது நிலம், வீடு, விவசாயம், தாயாரால், கல்வியினால் கடன்பட நேரிடும். ஐந்தாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது சுப செலவுகளுக்காக கடன் ஏற்படலாம்.

 

ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது வழக்குகள், விபத்துகள், நண்பர்கள் மற்றும் மனைவியினால் கடன் ஏற்படும். எட்டாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் எதிர்பாராத செலவுகள் கடன்பட வைக்கும். ஒன்பதாம் அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் பூர்வீக சொத்துகளை விற்க நேரிடும். பத்தாம்  அதிபதியுடன் சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் காரணமாக கடன் சுமை கூடும்.

 

கடன் தீர யோசனை - பரிகாரம்

 

கடன் தீர சாஸ்திரத்தில் பல பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளன. அஸ்வினி, அல்லது அனுஷம் நட்சத்திர நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தருவதால் கடன் பிரச்னை நீங்கும். ஞாயிற்றுக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியன்றும் சனிக்கிழமையில் வரும் சதுர்த்தி திதியிலும் குளிகன் நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சீக்கிரம் அடைபடும். மைத்ர முகூர்த்தம் என்று ஒன்று உள்ளது, இது ஒரு தமிழ் மாதத்தில் அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு வரும்.

 

அதாவது அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் நடைபெறும்போதும், அனுஷ நட்சத்திர நாளில் விருச்சிக லக்னம் நடைபெறும்போது யாரிடம் அதிக கடன்பட்டிருக்கிறோமோ அவரிடம் அசலில் ஒரு சிறிய பகுதியை கொடுத்தால் அந்த முகூர்த்த விசேஷம் காரணமாக, உங்கள் கடன் விரைவாக குறையும்; அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்துவர ருண, ரோக, சத்ரு தொல்லை நீங்கும். சஷ்டி திதியன்று முருகன் கோயில்களில் சஷ்டி கவசம் படிக்க, கடன் நிவாரணம் ஏற்படும்.

Click here to know more details : https://goo.gl/DBECqw

 

No Threads
more feeds from /u/gurusukran