கல்வியில் சிறக்க வேண்டுமா?

0 0 78 reads

கல்வியில் குறைபாடு இருக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தை பார்த்தால் புதன், சந்திரன், குரு இம்மூவரும் பலவீனமாக இருப்பார்கள்.  இந்த குறைபாடு நீங்க வேண்டும் எனில், புதன் கிழமை புதன் பகவானையும் , வியாழன் கிழமை குரு பகவானையும் வணங்கி வந்தால் சிறப்பாக இருக்கும். கல்விக்கான கடவுள் சரஸ்வதி ஆவாள். சரஸ்வதி ஸ்லோகத்தை படிப்பதற்கு முன் உச்சரித்து விட்டு பின்பு படிக்க துவங்கினால் நன்றாக படிப்பு வரும்.

 

சரஸ்வதி சுலோகம்  :

"சரஸ்வதி  நமஸ்துபியம்

வராதே  காமரூபிணி

வித்யாரம்பம்  கரிஷ்யாமி

சிட்திர் பவதுமே  சதா "

 

சில குழந்தைகள் படித்து கொண்டே இருப்பார்கள் , எவ்வளவு நேரம் படித்தாலும் மறந்து விடுவார்கள், அல்லது தேர்வில் மறந்து விடுவார்கள். இந்த குறைபாடுகள் நீங்க வேண்டும் எனில் தினமும் ஹயக்ரீவ சுலோகம் உச்சரிக்க வேண்டும்.

 

ஶ்ரீ ஹயக்ரீவ சுலோகம் :

“ஞானானந்தமயம் தேவம் நிர்மலம்  ஸ்படிகாக்ருதம்

ஆதாரம் ஸர்வவித்யாநாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே”

 

இம்மாதிரி படிப்பில் குறைபாடு உள்ளவர்கள் என்றால் புதன் கிழமையும் வியாழன் கிழமையும் கோவில் சென்று விளக்கு போட்டு வந்தால் இவை எல்லாம் நீங்கும், படிப்பில் கவனம் ஏற்படும்.

மேலும் மூன்றாம்பிறையை தவறாமல் பார்த்து வந்தால், கல்வியில் ஏற்றம் வரும். பின் வியாழன் கிழமை தோறும் தட்ஷனமூர்த்திக்கு கொண்டை கடலையுடன் நெய்வேத்தியம் செய்தால் நல்ல ஏற்றம் பெறலாம் .

இங்கு சொல்லப்பட்ட யாவும் பொதுவான பரிகாரங்களே.. உங்கள் ஜாதகத்தை டிகிரி சுத்தமாக ஆராய்ந்து , அதற்கான பரிகாரங்கள் பெற இந்த  லிங்க்கை கிளிக் செய்யவும் https://goo.gl/sl5r4v

 

 

 

 

No Threads
more feeds from /u/gurusukran