ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா?

0 0 59 reads

ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா?  உங்கள் கேள்விக்கான பதில் இங்கே ...  'ஆன்மீக ஆசான்' எழுத்து சித்தர் பாலகுமரன் அவர்கள் கூறுவது இதோ உங்கள் முன்னிலையில் ..

ஜோதிடத்தை மட்டுமே நம்பிய காலம் உண்டு,எனினும் ஜோதிடம் உண்மையா? ஜோதிடத்தை நம்பலாமா?  என்ற கேள்வி இங்கே எழுந்ததிற்கான காரணம்  ஜோதிடம் என்கிற விஷயத்தை இங்கு பலர் தவறாக பயன்படுத்துவதால் மட்டுமே. பல விஷயங்களை தவறாக பயன்படுத்துகிறார்கள்,கெட்டு போகாத விஷயங்கள் உலகத்தில் ஏதும் இல்லை . அவ்வாறு  சிலர் தவறாக பயன்படுத்துவதால் ஜோதிடம் தவறானது  அல்ல,மிக சரியானது,மிக  தெளிவானது . 

ஜோதிடமும் ஒரு வழியான நம்பிக்கையே. “ஜோதிடம் பொய்,அதை எவ்வாறு நம்புகிறீர்கள்? ”என்று கேட்கிறவன் எவ்வற்றையும்  நம்பாதவன்,தன்னையும்  நம்பாதவன் . " நான் எடுத்த காரியம் அத்தனையும் தோல்வியையே தழுவும்,நான் தோல்விக்கே பிறந்தேன்,நான் வாழக்கையில் உறுபடுவதில்லை "என்று தன் தலையில் தானே அழுத்தி  கொள்கிறவனுக்கு ஜோதிடம்,கடவுள்,உழைப்பு,உயர்வு,உற்சாகம் அனைத்துமே அவநம்பிக்கையை தரும் .

ஒருவன் வெற்றியை தழுவ காரணமாய் இருப்பவை எவை, அவனது கடின உழைப்பே, அவ்வாறு கடினமாய் உழைப்பதற்கு காரணமாய் இருப்பது அவன் மனதின் உற்சாகமே. மனதின் உற்சாகத்தை தூண்டுவது ஒரு விதமான நம்பிக்கையே. அப்படி பட்ட நம்பிக்கையை தர கூடியது ஜோதிடம் .

கண்ணனுக்கு புலப்படாத காற்றை நம்புவாய் எனில் ஜோதிடத்தை நம்புவாய் . சிற்பி செதுக்கிய சிலையில் இறைவனை காணும் வழியே ஜோதிடமும் ஆகும்.          

Click here to know more details : https://goo.gl/sl5r4v

No Threads
more feeds from /u/gurusukran