ஜோதிடம் என்றால் என்ன ? எழுத்து சித்தர் பாலகுமாரன்

0 0 48 reads

இந்து மதத்தின் அடிப்படை மொத்தம்  நான்கு வேதங்கள் ஆகும். அந்த வேதங்களில் ஒரு அங்கம் தான்  ஜோதிடம் . ஜோதிடம் யாரோ பொழுது போகாதவர் , ஏமாற்றுபவர் சொல்கின்ற விஷயம் அல்ல .

ஜோதிடம் என்பது ஒருவன் பிறந்த கணத்தில் இருந்த கோள்களின் நிலை மற்றும் விண்மீண்களின் அமைப்பினைக் கொண்டு கணக்கிடப் படுவதாகும்.நட்சத்திரங்களின் தாக்கங்களையும் கிரகங்களின் தாக்கங்களையும் வைத்து ஜோதி உருவில் கணித்து ஜோதிடமாக கூறப்படுகிறது.

கோள்களின் இயக்கங்களை ஞான அறிவால் உணர்ந்த ஞானிகள் இதனை புரிந்து கொண்டு பல்லாயிரம் கணக்குக்கான வருடங்களுக்கு முன்பே அதை பற்றி விரிவாக எடுத்து சொல்லி இருக்கிறார்கள்.

இது இன்று நேற்று வந்தது அல்ல. இது மூட நம்பிக்கையாயின் ஐயாயிரத்து வருட மூட நம்பிக்கை இது முந்தைய நேற்று மூட நம்பிக்கை அல்ல .

உலகில் எல்லா நம்பிக்கையும் மூட நம்பிக்கை தான். தன் தலைவன் மீது இருக்கும் நம்பிக்கை, தன் மனைவி மீது இருக்கும் நம்பிக்கை, கற்சிலையின் மீது வைக்கும் நம்பிக்கை,

ஒருவிதமான ஒழுக்கங்கள் மீது வைக்கும் நம்பிக்கை, உங்கள் பிராத்தனையில் வைக்கும் நம்பிக்கை எல்லாமுமே மூட நம்பிக்கை தான்.

நம்பிக்கையை அசைத்து பார்த்தால் , சிலருக்கு மூடமாகவும் சிலருக்கு உண்மையாகவும் தெரியும். அது அவரவர் விதி, ஞானம் .

Click here to know more details : https://goo.gl/ewi39Z

 

  

No Threads
more feeds from /u/gurusukran