தொழில் யோகம் பற்றி ஜோதிடம் கூறுவது | குருசுக்ரன்

0 0 106 reads

கால நேரம் வரும்போது எல்லாம் கூடிவரும் என்பது படித்தவர் முதல் பாமரர் வரை சொல்லும் வழக்கு மொழியாகும். இந்த கால, நேரம் எதற்கு வருகிறதோ இல்லையோ, நிச்சயமாக ஜீவனம் எனும் தொழில், வியாபாரத்திற்கு வந்தே ஆகவேண்டும். ஏனென்றால் வியாபாரம், தொழில் இல்லாமல் இந்த உலகத்தில் வாழ்வது கடினம். மனிதரின் ஜாதக அமைப்புக்கு ஏற்ப, அவரவர் பூர்வ புண்ணிய யோகத்தின்படி இந்த வியாபார யோகம் அமைகிறது. இந்த யோகம் ஒரு சிலருக்கு சிறிய முயற்சியிலேயே அமைந்து விடுகிறது. சிலருக்கு விடாமுயற்சியின் பேரில் கிடைக்கிறது. ஒரு சிலர் பல நஷ்டங்கள், கஷ்டங்களை சந்தித்தபின், பெரிய அளவில் தொழில் வளர்கிறது. ஒருவர் குடும்பத் தொழிலை மேலும் வளர்த்து செல்வந்தர் ஆகிறார்.

சிலருக்கு தகப்பனார் ஆரம்பித்த தொழில் கை கொடுக்கிறது. இன்னும் சிலருக்கு மனைவி வந்தவுடன் தொட்டதெல்லாம் துலங்குகிறது. சில மகா பாக்யவான்கள் பிறக்கும்போதே பெரிய தொழில் அதிபர் வீட்டில் பிறக்கிறார்கள். பலருக்கு ஜாதகக் கட்டத்தில் நீச்ச பங்க ராஜ யோகம், விபரீத ராஜ யோகம், தசம தனலட்சுமி யோகம், பஞ்சமகா புருஷ யோகம், தர்மகர்மாதிபதி யோகம் போன்ற யோகங்கள் அமையப் பெற்று அந்த யோகம் பலன் தரும்போது வியாபாரமும் தொழிலும் கொடிகட்டிப் பறக்கின்றன.

வியாபார ஸ்தானமும் கிரகங்களும் ஜாதகக் கட்டத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒவ்வொரு பலன், அமைப்பு உண்டு. உங்களது  தொழில் அமைப்பை தெரிந்து கொள்ள இந்த லின்கை லிங்க் செய்யவும் https://goo.gl/TxPxOz

No Threads
more feeds from /u/gurusukran