திருமறை ஓதுவதால் கிடைக்கும் நன்மைகள்

0 0 59 reads

திருமறைகளை ஓதுவதால் நிறைய பலன்கள் கிடைக்கும். திருமறைகளில் 8 வது திருமறையாய் இருக்கும் திருவாசகத்தை ஓதினால் நமது பிறவி பிணிகள் எல்லாம் தீரும்.

 

திருவாசகம் :

 

"தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் என்னும் தேன்"

 

திருவாசகம் என்பது ஒரு தேனை போன்றது. தேன் எந்த பொருளோடு சேருகிறதோ அதை தன்வயம் படுத்தி கொள்ளும். அது போன்று எவன் ஒருவன் திருவாசகம் பயில்கிறானோ அவன் தன்னை சுற்றி இருப்பவர்களை தன்வயம் படுத்தி கொள்வான், அவர்களை எந்த ஒரு தீய வழிகளையும் நோக்கி செல்ல விடமாட்டான்.

 

 திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது

 

மாணிக்கவாசகர் பாடிய எட்டாம் திருமுறையாகிய திருவாசகம் மிகச்சிறந்த சிவநெறிப் பனுவல் ஆகும். பக்தி இலக்கியங்களுள் தலைமை சான்றது. உயிர்களைப் பிணித்துள்ள வலிய தளைகளை நீக்கிப் பேரின்பத்தைத் தரும் இயல்புடையது திருவாசகமாகும்.

For more details visit : https://goo.gl/dzMC48

 

 

 

 

No Threads
more feeds from /u/gurusukran